நீண்ட நாட்களுக்கு பின் ஒரே நாளில் 2,000க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம்!

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளொன்றில் 2,000க்கும் குறைவான தொற்றாளர்கள் நேற்றைய தினம் (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று(18) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,983ஆக பதிவாகியுள்ளது.

இறுதியாக கடந்த யூலை 28ஆம் திகதி நாளொன்றில் 2,000க்கும் குறைவான தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியிருந்தது. அன்றைய தினத்தில் 1,940 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 51 நாட்களின் பின்னர் நாளொன்றில் மீண்டும் 2,000க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 502,755 ஆக அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)