
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் காணாமல் போனோருக்கான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பலர், நாம் ஆட்சிக்கு வந்தமையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை நாட்டின் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்த்து கொள்ள முடியும். அதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுவதற்காக அழைப்பை விடுக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





