இலங்கையின் தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(30) வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
மேலும், இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக மலேஷியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டிலுள்ள அனைத்து அரச சொத்துக்களையும் அரசாங்கம் இவ்வாறு சூட்சுமமான முறையில் விற்பனை செய்துவருவதாகவும் புத்திக்க பத்திரண மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





