இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 26மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பு ஐ.டி.எச்.
வைத்தியசாலையில் மேலும் ஒருவர்
அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 11 ஆம் திகதி நாடு திரும்பிய
உக்ரைன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு
மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை மலேரியா அற்ற நாடாக 2012ஆம் ஆண்டு பிரகடனப் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





