அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது. அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பதினொரு பங்காளிக் கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாங்கள் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம். அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்துவராது. எதிர்காலத்தில் 11 பங்காளி கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுவதாக இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போதும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்து விட்டார். இந்த போராட்டத்தில் அரசியல் களத்தில் இருந்து தான் விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது மக்களின் எதிர்பார்ப்புகளை அழித்து வருவதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





