இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை உடனடியாக ஒழிப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகளைக் கண்டறிந்து, அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த குழு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது மேற்படி விடயம் தொடர்பில் கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.






