இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு


இலங்கை கிரிக்கட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று(06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால குழுவை நியமித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 25ம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சரினால் இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,தற்போதைய கிரிக்கெட் சபை அதற்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக முன்னால் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம்,ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க,ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரெரா ,உபாலி தர்மதாச,சட்டத்தரணிகளான ரக்கித ராஜபக்‌ஷ,ஹிமாம் ஜமால்டீன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.