யாழில் சீனத் தூதுவர்! பல இடங்களுக்கு விஜயம்; உணவுப் பொதிகளும் வழங்கிவைப்பு

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் யாழ்மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டதுடன்பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களையும்வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணமாக இலங்கைக்கான சீன தூதுவர் கிஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் வருகை தந்துள்ளனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டச் செயலங்களில் சீனாவின் பௌத்தசங்கத்தின் தொண்டு திட்டத்தின் ஊடாக பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின்பௌத்த மக்களால், இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிவழங்கும் நிகழ்வு  நேற்று இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக சீன தூதுவர்அடங்கிய குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

ஆயர் இல்லம்

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்ற சீனத் தூதுவர் தலைமயிலானகுழுவினரால் ஒரு தொகுதி மக்களுக்கான நிவாரணப் பொதிகள்வழங்கிவைக்கப்பட்டது.

பழைய கச்சேரி

பின் சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரியைபார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியானது சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனைசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுஎழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரியசந்தேகங்களை கிளப்பியுள்ளது.

யாழ் மாவட்ட செயலகம்

மேலும் சீன அரசினால் 5000 ஆயிரம் பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் அடுத்த கட்டங்களாக உலர்உணவுப்பொதிகளை   தூதுவரே நேரடியாக வழங்கி வைக்க உள்ளமையும்குறிப்பிடத்தக்கது.

இவ் உலர் உணவுப்பொதிகள் யாவும் சுமார் 7500 ரூபா பெறுமதியானவை என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்சிவபாலசுந்தரன் மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.