கிருஷ்ணமீனன் தலைமையில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று இடம்பெற்றது.
இன்று மதியம் 12 மணியளவில் உரும்பிராயில் உள்ள பொன்.சிவகுமாரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து தேர்தல் விஞ்ஞானத்தின் முதல் பிரதியினை பொன்.சிவகுமாரனின் சகோதரியிடம் வழங்கி வைத்து தங்களுடைய பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்தனர்.
மேலும் தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய துண்டுப்பிரசுரமும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.









