இலங்கையில் யானைகள் மீதான கொடுமையைத் தடுக்கக் கோரி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் மகள் ஸ்வைரி இணையவழி மனுவைத் தொடங்கினார்.
குறித்த இணையவழி மனுவினை வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு வழங்கியுள்ளார்.
யானைகளுக்கு எதிரான கொடுமை இலங்கையில் மிகவும் சிக்கலான உரையாடலாக மாறியுள்ளது என்று கூறிய ஸ்வைரி, நாட்டில் யானைகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க மனுவில் கையெழுத்திடுமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.





