முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ் ஊடக மன்றத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இன்று காலை 11.30 மணியளவில் யாழ் ஊடக மன்ற ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்ட செயலாளர் மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு குறித்த மகஜரை கையளித்தனர்.
இதன் பின்னர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ் ஊடக மன்ற ஊடகவியலாளர்கள் தமது கண்டன அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இக் கடிதத்தினை ஜனாதிபதிக்கும், ஊடக அமைச்சின் செயலாளருக்கும் அனுப்புவதாக உறுதியளித்துள்ளேன்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை கண்டிக்கதக்க ஒரு விடயம், எனவும் தெரிவித்தார்.







