பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான பரீட்சைகளை இணையவழி ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையவழி கற்றல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது, என்றார்.





