சீன அரசு போன்று மோசமான ஒப்பந்தங்களோடு வராது, அமெரிக்கா நண்பனாக வந்திருக்கிறது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்தார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட மைக் பொம்பியோ ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார். இதன் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மோசமான ஒப்பந்தங்கள், நாட்டின் இறையாண்மையை மீறுதல் மற்றும் நிலத்திலும் கடலிலும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்டையாடல்களை மேற்கொள்ளும்
ஆனால் அமெரிக்கா வேறு வழியில் வந்திருக்கிறது. நாங்கள் ஒரு நண்பராகவும், ஒரு கூட்டாளியாகவுமே வந்திருக்கின்றோம் என்றார்.





