100 ஆண்டுகளில் 3-வது முறையாக உலகின் மிகப்பெரிய திமிங்கலம் தென்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறையும் இவ் திமிங்கலம் வெளிப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
ஆனாலு இம் முறை புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்ட இவ் விடையம் பரவலாக பரவி புகழ்பெற்று வருகிறது. இந்த நீலநிற திமிங்கலம் உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் என்று கருதப்படுகிறது. இதனை சிட்னியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சியான் கே என்பவர் படம்பிடித்து தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/CEBUlBsjGc3/?igshid=vkc8ztqm3p8i
100 டன் எடை கொண்ட இவ் இராட்சத திமிங்கலத்தினுடைய நாக்கினுடைய எடை மட்டுமே யானையின் எடைக்கு சமனானது என கூறப்படுகிறது

கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த நீலநிற திமிங்கலம் தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கேப் சோலேண்டர் பகுதியில் நீலநிற திமிங்கலத்தை பார்த்ததாக கடல்வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





