நயினாதீவினை அண்மித்த கடற்பரப்பில் அலையின் மட்டம் அதிகரித்தது

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – நயினாதீவினை அண்மித்த கடற்பரப்பில் அலையின் மட்டம் அதிகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும், அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்புக்கள் கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் இதனால் நயினாதீவினை அண்மித்த கடற்பரப்பில் அலையின் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நயினாதீவிற்கு பிரவேசிக்கும் பாதைக்கு மேலால் கடல் நீரில் பாய்வதும் குறிப்பிடத்தக்கது.