கொரோனா வைரஸ்தொற்றுறுதியான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(31) பொறளை பொலிஸ்நிலையத்தின் 7 அதிகாரிகள் உள்ளிட்ட 78 பொலிஸாருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருந்தது.
இந்தநிலையில், மேலும் 22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாகவும் இதனாலு கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.





