டிப்பரின் பின்பகுயில் மோதி முச்சக்கரவண்டி விபத்து மூவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமனை அருகில் திடீரென டிப்பர் ஒன்று பிரேக் அடித்ததில் அதே திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று டிப்பரின் பின்பகுயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (08) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.