கஜேந்திரகுமாருக்கு எதிராக சபையில் பெரும் கூச்சல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் பெரும் கூச்சல் இட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெறுகின்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இலங்கைஇராணுவம் போர்க்குற்றம் செய்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, பிரதியமைச்சர் நிமல் லன்ஸா, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கூச்சல் இட்டனர்