திருகோணமலை காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் இருந்து ஐந்து கைக்குண்டுகள் நேற்று(04) மாலை மீட்கப்பட்டதாக சேருவில பொலிஸார் தெரிவித்தனர்.

சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கைக்குண்டுகளை திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

இக் கைக்குண்டுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதெனவும் எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது எனவும் சேருவில பொலிசார் தெரிவித்தனர்.