மாவீரர் நினைவேந்தல் சர்ச்சை; நாடாளுமன்றில் பொன்சேகாவை வறுத்தெடுத்தார் மனோ

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தக்க பதிலடி வழங்கினார்.

இது தொடர்பில் அவரது உரையின் ஒரு பகுதி,

2010ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் சென்று அவருக்கு ஆதரவாக பரப்புரை முன்னெடுத்தவன் நான். நன்றி மறந்து அவர் உரையாற்றியுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல் குறித்து நான் வெளியிட்ட கருத்தையும், மாவீரர் நாள் நினைவேந்தலையும் தொடர்புபடுத்தி மனோகணேசனின் கருத்து எமது கட்சியின் கருத்து அல்ல என பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் தான் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். சரத் பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் ஒன்றும் சிறு பையன் கிடையாது.

மாவீரர் நாள் நினைவேந்தலில் கூட தமிழ் மக்கள் இணைந்து வாழ்வதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது என்ற விடயத்தையே நான் வலியுறுத்தியிருந்தேன், என்றார்.