இன்று வெள்ளிக்கிழமை(20) வடமாகாணம் முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களில் நீதிமன்ற செயற்பாடுகளை பகிஷ்கரித்து சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம்(18) கலந்துரையாடல் நடத்திய நிலையில் இன்று(20) மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.





