எழுமாற்றான பரிசோதனையிலேயே மருதனார்மட வாசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மருதனார்மடம் பகுதியில் இன்று கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாளை அப் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இன்று ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருனார்மடம் சந்தையில் கடை வைத்திருக்கும் குறித்த நபர் முச்சக்கரவண்டியும் வைத்திருப்பதாகவும் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு இன்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த நபருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே நாளைய தினம் மருதனார்மடம் பகுதியில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்றார்.