கடற்படைக் கப்பல்கள் காலிமுகத்திடலில் மக்கள் பார்வைக்கு

கடற்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கடற்படையின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் 13ஆம் திகதி வரை காலிமுகத்திடல் கடலில் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதுவரை பொதுமக்கள் பார்வையிட முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.