காலி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களுக்கு பயணத்தடை

காலி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களுக்கு பயணத்தடை விதிக்க சுகாதாரப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

25 கொரோனா தொற்றாளர்கள் குறித்த 7 கிராமங்களில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.

அதன்படி, மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.