கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிட அமைச்சரவை தீர்மானம்!

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக கித்துலை பெயரிடுவதற்கும் கித்துல் அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கித்துல் உற்பத்திக் கைத்தொழில் இலங்கையின் தனித்துவமான கைத்தொழிலாகவும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடிய கைத்தொழிலாகவும் சமகாலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும், மக்களின் பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கித்துல் செய்கைக் கைத்தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடவும் கித்துல் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கும், பெருந்தோட்டத் துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.