தியாகி திலீபனின் நினைவேந்தலை வழமைபோன்று யாழ் மாநகர சபையினரால் கடைப்பிடிக்க முடியாது என யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யாழ் மாநகர முதல்வருக்கு அறிவித்துள்ளார்.
நல்லூர் பின்வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல்கள் வழமையாக இடம்பெறும். கடந்த காலங்களில் யாழ் மாநகர சபை இந்நிகழ்வை பொறுப்பேற்று நடாத்தியிருந்தது.
இந் நிலையில் இவ் வருடம் நினைவேந்தல் வாரம் ஆரம்பிப்பதற்கு இரு நாட்களே உள்ள நிலையில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.





