வீட்டுத்திட்ட நிதியை உரிய நேரத்தில் வழங்கக்கோரி கவணயீர்பு போராட்டம்

வீட்டுத்திட்டங்களுக்கான நிதி உரிய நேரத்தில் கிடைக்காததால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக கூறி யாழ்ப்பாணம் – நாவாந்துறை வடக்கு வசந்தபுரம் மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டுத் திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான அரம்ப நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை கட்டி முடிப்பதற்கு மீதமாக வழங்கப்பட வேண்டிய நிதி கிடைக்கப்பெறாததால் பருவப் பெயர்சி மழைக் காலங்களில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக கூறி மக்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.