கிளிநொச்சி கல்மடு குளத்தில் நேற்று காணாமல் போனவர் இன்று சடலமாக மீட்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளத்தினுல் மூழ்கி நேற்றைய தினம் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் இன்று(26) சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்துக்குச் சென்றனர். இதன்போது குறித்த குடும்பஸ்தர் குளத்தில் இறங்கிய நிலையில் காணாமல் போனார்.

இந் நிலையில் இன்று காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயது ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.