மூச்சுத் திணறலால் கைதடியைச் சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

கைதடி – கோவிலாக் கண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று மாலை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(08) உயிரிழந்தார். இராசையா இராஜநாகேஸ்வரன்  என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்றில் இன்று அறிக்கையை தாக்கல் செய்தனர். யாழ்ப்பாண பிரதேச திடீர் விசாரணை அதிகாரி பிரேம்குமார் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாரை பணித்துள்ளார்.