தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், ஒற்றுமையைப் பலப்படுத்தும் விதமாமாகவும் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என சட்டத்தரனி மணிவண்ணன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் இளைஞர் சந்திப்பு தென்மராட்சியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சிதைக்கப்பட்டதை கண்ணூடாக காண்கின்றோம். தென்னிலங்கை சிங்களப் பேரினவாத சக்திகளும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் வடக்கு கிழக்கில் மையம் கொள்வதனை அவதானிக்கின்றோம்.
இதன் அபாயத்தை உணர்ந்து தமிழ் மக்களின் கொள்கைகளை வென்றெடுப்பதற்கான முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம், என்றார்.





