கிழக்கு மாகாண 13 உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த தடை

கிழக்கு மாகாணத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களினுடைய தலைவர்கள் தங்களினுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால் பணிப்புரைக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் தவிசாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் அடங்கலாக 13 உள்ளூராட்சி மன்றங்களினுடைய தலைவர்களுக்கு தமது அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர், அம்பாறை ஆகிய நகர சபைகளின் தலைவர்களுக்கும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர்பற்று, சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளினுடைய தலைவர்களுக்குமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.