உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் வருகை!

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய மற்றுமொரு விமானம் இன்று(08) மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த விமானத்தில் 140 உக்ரைன் பிரஜைகள் வருகை தந்ததாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் உக்ரைனிலிருந்து வந்தடைந்த ஆறாவது சுற்றுலா குழுவினர்களாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.