
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளிடம் துணைவேந்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாணவ ஒன்றியத்தினருடான சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்ததாவது,
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் அசம்பாவிதங்களை தடுப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழுவால் ஐந்து பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே இடிக்கப்பட்டது. அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்றார்.
கல்விச் செயற்பாடுகளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்ததாக, மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.





