கைதடி நவீல்ட் செவிப்புலன், விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று (15) விஜயம் மேற்கொண்டார்.
மேலும் அங்கு கல்வி பயிலும் செவிப்புலன், விழிப்புலன் இழந்த மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும் இப்பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 18 மாணவர்களுக்கு அவர்களுடைய தொழில் முயற்சிக்கான பொருளாதர உதவிகளை தனது பாராளுமன்ற ஊதியத்திலிருந்து வழங்குவதாகவும் இவ் விஜயத்தின் போது உறுதிமொழயளித்தார்.






