மன்னிப்பு கேட்க கோரிய டெனிஸ், மறுத்த விக்கி, நீதிமன்றில் விசாரணை

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபை முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொடுக்கப்பட்ட வழக்கை மீளப்பெறுவதாக நேற்றைய தினம் டெனிஸ்வரன் அறிவித்த போதும் தம்மை சட்டதிட்டங்களுக்கு புறம்பாக பதவிவிலக்கியமை தொடர்பில் விக்னேஸ்வரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் டெனிஸ்வரனால் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் டெனிஸ் – விக்கி தரப்பிற்கிடையே சமரசம் ஏற்படதாததால் வழக்கு திரும்பப் பெறப்படவில்லை. இதனால் இவ் வழக்கு இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ் வழக்கிற்கான விசாரணை நாளையும் நாளை மறுதினமும் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நீதிமன்றத் தீர்பில் விக்னேஸ்வரன் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு உள்ளாக வேண்டியதோடு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.