அனைத்துக் கட்சிக் கூட்டதினை வெள்ளியும் நடாத்த முடிவு

தமிழர் தாயகங்களில் தியாகி திலீபனை நினைவுகூறுவது தடைசெய்யப்பட்டமை உள்ளீட்ட பல்வேறு அடக்குமுறைகள்  தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கான அனைத்து கட்சிகள் கூட்டம் (அனைத்துக் கட்சிக் கூட்டம் என சொல்லப்படும் கூட்டம்) நேற்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தற்கால நெருக்கடிச் சூழலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் நேற்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் படி இன்றைய தினம் வருகை தந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குள்ளே கலந்துரையாடினர். மேலும் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படக்கூடிய கட்சிகளை மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்பதெனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.