வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை கொண்டுவரு விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த் தொற்றோடு வெளிநாட்டிலிருந்து ஏராளமான இலங்கையர்கள் நாடு திரும்பியதால் நாட்டிற்குள் திரும்பும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.
அதனடிப்படையில் இன்று முதல் ஒருநாளைக்கு வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை ஏற்றிவரும் ஒரு விமானம் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 4 நாட்களில் 102 கோவிட் 19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் எனவும் தெரிவித்தார்.





