
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹி ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு மீட்பு படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்ட எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அந்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.





