மணியின் தலைமையில் முன்னணிக்குள் இளைஞர் அணி தொடரும் சதுரங்க ஆட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் பெயரையோ சின்னத்தையோ, தேசிய அமைப்பாளர் என்ற பெயரையோ பயண்படுத்த முடியாதென அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று(05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு “தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை” என்ற புதிய அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் எதிர்கால நடவடிக்கைகள் திட்டங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.