பி.பி.சி சிங்கள வானொலி சேவை எதிர்வரும் திங்கட்கிழமை(30) முதல் நிறுத்தப்படும் என இங்கிலாந்தில் உள்ள தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் (என்.யூ.ஜே) தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2020 இல், பிபிசி சிங்கள வானொலிச் சேவையை நிறுத்திவிட்டு சமூக ஊடகங்களில் விரிவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பி.பி.சி சிங்கள வானொலி சேவையை நிறுத்தினாலும், அதன் சமூக ஊடக மற்றும் இணையவழி சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிபிசி சிங்கள வானொலி சேவையை மூடுவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம், பி.பி.சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.





