இலங்கையின் முதலாவது அணுமின் நிலையம்

ரஷ்யாவின் தொழில்நுட்ப ஆதரவுடன் 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் முதலாவது அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க முடியும் என அந்நாட்டின் அணுசக்தி வாரியம் தெரிவித்துள்ளது.

நிலக்கரிக்கு கூடுதலாக அணுசக்திக்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை அரசாங்கம் விரைவில் தொடங்கும் என்றும், உலக அணுசக்தி ஆணையத்திடம் இருந்து பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் பெர்டினாண்டோ நம்புவதாகவும் தெரிவித்தார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அணுமின் நிலையத்தை அமைக்க முடியும் என இலங்கை அணுசக்தி வாரியம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி வாரியத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.