செம்மணி மனித புதைகுழி என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 88ஆக அதிகரிப்பு


யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 76 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.