காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் 22 பேர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையில் பிரதேசவாசிகள் இரும்புத் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், கடந்த இரண்டு மாதங்களின் மாத்திரம் சுமார் 12 கோடி ரூபாக்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ள என சீமந்து கூட்டுத்தாபனத்தின்தலைவர் ஜெகத் தர்மபிரிய தெரிவித்திருந்தார்.
மேலும் இத் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில்(NewsCut.lk) முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்படட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இந்நிலையில் காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
NewsCut





