விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குற்பட்ட பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

“இதனால் இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் 5 கிலோமீற்றர் தொலைவிற்கு பட்டம் பறக்கவிடுவதற்கு அனுமதி இல்லை என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது” என்று இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.