நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5,580 பொலிஸார் 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 ராணுவ வீரர்களும் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.