அறுகம்பே தாக்குதல் திட்டம்! யாழைச் சேர்ந்தவர் உட்பட இரு முன்னாள் போராளிகள் கைது

 

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியப் பிரஜைகள் மீதான தாக்குதல் சதித் திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் உட்பட மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான சந்தேக நபர், சுன்னாகத்தில் அவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிற் றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர், குற்றச் செயல் ஒன்றிற்காக சிறையில் தண்டனை அனுபவித்த காலப்பகுதியில் சிறையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளைப் பெற்று, நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மாத்தளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒரு வரும் கொழும்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 முதல் 23ஆம் திகதிகளுக்கு இடையில் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கும் இஸ் ரேலியர்கள் மீது தாக்குதல் நடத் தும் திட்டம் உள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள் இலங்கைக்கு அறிவித்திருந்தன.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடாத்த தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வுப் பிரிவு அறிவித்திருந்தது.

இந்நிலையி லேயே ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச் சாட்டில் சுன்னாகம், மாத்தளை மற்றும் கொழும்பைச் சேர்ந்த மூவரும்கை தாகியுள்ளனர்.