ஊடக செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்(02) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக் கொண்டிருக்கும் கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை விரிவுரையாளர்களால் விரிவுரைகள் இடம்பெற்றது. நிறைவாக கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தது.

வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருதினராக வெகுசன ஊடக அமைச்சர்‌ கெஹெலிய ரம்புக்வெல்ல, தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் யோகராஜன், வெகுஜன ஊடக அமைசின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.