ஒக்.01 ஆம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கு தொடருமா? – புதிய தகவல் இதோ!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா இல்லையா என்பது குறித்தான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம் எடுக்கப்படவுள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி எதிர்வரும் இரு தினங்களுக்குள் கட்டாயம் அறிவிப்பார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)