நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி நிலமையிலும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெருமெடுப்பில் வீதி அபிவிருத்தி பணியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராம வீதியை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன் போதே நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்தில் கொள்ளாது இராஜாங்க அமைச்சர் பெருமெடுப்பில் வீதி புணரமைப்பு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.
மேலும் மட்டகளப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





