கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியல் கடந்த மாத ஆரம்பத்தில் 145வது இடத்திலிருந்த இலங்கையானது தற்போது 107ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
இந்த ஒரு மாத காலத்தில் 8709 புதிய தொற்றாளர்களும் 11 புதிய உயிரிழப்புக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் 12,187 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதோடு உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக காணப்படுகின்றது.





